ARTICLE AD BOX
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய மற்றும் மணல் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். எனவே 2012-ஆம் ஆண்டு சுதாகர் பன்றி இறைச்சியை வாங்கி வந்து தனது நண்பர்களுக்கு சமைத்து தருமாறு மனைவியிடம் கூறினார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் சுதாகர் தனது மனைவி மற்றும் இளைய மகளை நிர்வாணமாக வீட்டிற்கு வெளியில் நிற்கும்படி சித்தரவதை செய்துள்ளார். இதுகுறித்து சுதாகரின் மனைவி தனது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுதாகரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சுதாகருக்கு 10 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுதாகர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கு விசாரணையின் போது சுதாகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மரணத்திற்கு தகுந்த ஆதாரம் இல்லை எனவும், இறந்தவரை தற்கொலைக்கு தூண்டும் நோக்கம் இல்லை எனவும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுதாகருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் வழங்கியுள்ளார்.