ARTICLE AD BOX
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வைபவ் ஹாண்டே என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் சில பேரிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அதன் பின் வட்டிக்கு அசல் தொகையையும் சேர்த்து கூடுதலாக 9 லட்சத்தை கொடுத்துள்ளார். இருப்பினும் அவர்கள் பணம் செலுத்துமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாத வைபவ் மனைவி மற்றும் மகனுக்கு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது உறவினர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வைபவ் வீட்டிற்கு வந்த உறவினர் கதவை நீண்ட நேரம் தட்டியுள்ளார். ஆனால் எந்தவித பதிலும் இல்லாததால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வைபவின் மனைவி, சுபாங்கி ஹாண்டே(36) மற்றும் அவர்களது மகன் தன்ராஜ்(9) உயிரிழந்துள்ளனர். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த வைபவ்வை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. அதன்பின் அவர் அளித்த வாக்குமூலம் படி 4 பேர் மீது காவல்துறையினால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.