ARTICLE AD BOX
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நாயகன் சதீஷ், "மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்து விட்டேன்" என்று பதிவு செய்திருப்பதை அடுத்து, இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய பாக்கியலட்சுமி சீரியல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சதீஷ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, நாயகிகளாக சுசித்ரா ஷெட்டி மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.
1,200 எபிசோடுகளுக்கும் அதிகமாக ஒளிபரப்பாகி உள்ள இந்த சீரியல் விரைவில் முடிவடையும் என கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திடீரென சதீஷ் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில், "பாக்கியலட்சுமி என்ற பப்ளிக் எக்ஸாம் முடியும் நேரம் வந்துவிட்டது. நான் பாஸா அல்லது பெயிலா என்பதை ரசிகர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. மனதிலும், உடம்பிலும் சோர்ந்து விட்டேன். இருந்தாலும், முயற்சிகள் தொடரும்" என்று கூறியுள்ளார். இதனை அடுத்து, இந்த சீரியல் கிளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.