மத்தியப் பிரதேசத்தில் லாரி - வாகனம் மோதல்: 8 பேர் பலி, 13 பேர் காயம்

3 hours ago
ARTICLE AD BOX

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை லாரி - வாகனம் மோதியதில் 8 பேர் பலியானார்கள்.

சிதி-பஹ்ரி சாலையில் உள்ள அப்னி பெட்ரோல் நிலையம் அருகே அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல் துணை கண்காணிப்பாளர் காயத்ரி திவாரி தெரிவித்தார்.

சிதியிலிருந்து பஹ்ரி நோக்கி லாரியும், ஒரு குடும்ப உறுப்பினர்களுடன் மைஹார் நோக்கிச் சென்ற வாகனமும்( SUV டாக்ஸி சேவை) நேருக்கு நேர் மோதியதாக அவர் கூறினார்.

அதில் வாகனத்தில் பயணித்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அதிகாரி கூறினார். காயமடைந்த 14 பேரில், ஒன்பது பேர் மேல் சிகிச்சைக்காக ரேவாவுக்கு அனுப்பப்பட்டனர்.

நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா

அங்கு பலத்த காயமடைந்தவர்களில் ஒருவர் பலியானதாக சிதி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர வர்மா தெரிவித்தார்.

மற்றவர்கள் சிதி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக திவாரி கூறினார். வாகனம் தவறான திசையில் வந்ததே விபத்திற்கான காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குழந்தையின் மொட்டை எடுக்கும் நிகழ்ச்சிக்காக சென்றபோது வாகனம் விபத்தில் சிக்கியிருப்பது தெரிவந்துள்ளது.

Read Entire Article