ARTICLE AD BOX
புதுடெல்லி,
புதிய வருமான வரி சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், அது தொடர்பான மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் பட்ஜெட் உரையின்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் புதிய வருமான வரி மசோதா குறித்து விவாதிக்கப்படும் என மத்திய நிதித்துறை செயலாளர் துஹின் காந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வருமான வரி மசோதா ஒரு மாறுபட்ட மசோதாவாக இருக்கும். புதிய வருமான வரி மசோதாவில் நீண்ட வாக்கியங்கள், விதிகள் மற்றும் விளக்கங்கள் இருக்காது. மசோதா மிகவும் எளிமையானதாகவும், சட்ட வல்லுநர்கள் மட்டுமல்லாமல் சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும்" என்றும் கூறினார்.