மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. ரூ.1,80,000 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

4 days ago
ARTICLE AD BOX

மத்திய அரசின் கெயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பம் தொடங்கியுள்ளது. மொத்தம் 73 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கேட் 2025 தேர்வை எழுதியவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடம் : இதில் பொது பிரிவில் – 32, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 5, ஒபிசி பிரிவினர் – 20, எஸ்சி பிரிவினர் – 10, எஸ்டி பிரிவினர் – 6 என மொத்தம் 73 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 18.03.2025 தேதியின்படி, அதிகபடியாக 26 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 10 முதல் 15 வயது வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித் தகுதி : கெயில் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு துறை சார்ந்த பாடப்பிரிவுகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கேட் 2025 (GATE‐2025) தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வை எழுதி இருக்க வேண்டும்.

சம்பள விவரம் : கெயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நிர்வாக டிரைய்னி பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் கேட் 2025 தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் அடுத்தக்கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://gailonline.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் தனியாக செலுத்த வேண்டிய அவசியமில்லை. கேட் 2025 விண்ணப்பப் பதிவு எண் மற்றும் அட்மிட் கார்டு எண் ஆகிய விவரங்களை விண்ணப்பத்தில் அளிக்க வேண்டும்.

Read more : விபரீதத்தில் முடிந்த இன்ஸ்டா நட்பு.. 13 வயது சிறுமி கர்ப்பம்.. ஆசை வார்த்தை கூறி இளைஞன் அத்துமீறல்..!!

The post மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. ரூ.1,80,000 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article