ARTICLE AD BOX
மத்திய அரசின் Prime Minister’s Internship Scheme (PMIS) என்ற புதிய திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மத்திய அரசால் Prime Minister’s Internship Scheme (PMIS) என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 21 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு. ஐ.டி.ஐ. டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு சிறந்த 500 நிறுவனங்களில் ஒராண்டு கால (12 மாதங்கள்) Internship பயிற்சி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். வயது வரம்பு 21 முதல் 24 வயது வரை, மாதாந்திர உதவித்தொகை – ரூ. 5000, ஒருமுறை மட்டும் வழங்கப்படும் மானியம் ரூ.6000 வழங்கப்படும். https://pminternship.mca.gov.in/login என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் பயிற்சி பெறும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதந்திர உதவித்தொகையாக ரூ. 5000/- மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ஒருமுறை மட்டும் ரூ.6000/- வழங்கப்படும். இத்திட்டத்தில் பயிற்சி மேற்கொள்ள விரும்புவர்கள் National Apprenticeship Promotion Scheme (NAPS) திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி பெற்றிருத்தல் கூடாது மற்றும் முழுநேர பணி அல்லது முழுநேர கல்வி ஆகியவற்றில் ஈடுபட்டிருத்தல் கூடாது.
இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள இளைஞர்களுக்கு நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், நாமக்கல் அவர்களை அறை எண் -304 -ல் நேரிலோ அல்லது 04286-290297, 94877 45094 ஆகிய தொலைபேசி எண்களின் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
The post மத்திய அரசின் சூப்பர் திட்டம்… மாதம் ரூ.5,000 உதவித்தொகை…! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.