ARTICLE AD BOX
கள்ளு என்பது பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். மது மற்றும் கள்ளு இரண்டில் உடலுக்கு எது நல்லது என்ற கேள்வி பலருக்கும் பல காலமாக உள்ளது. அப்படியாக மதுவுக்கு பதிலாக கள்ளு குடிக்கலாமா? என்ற கேள்விக்கு சித்தமருத்துவர் சிவராமன் தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
பனை மரத்து கள்ளால் ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் அதிகரிக்கும் என பலரும் கூறி அதை பருகுவது உண்டு. இன்றைய கால கட்டத்தில் நிறைய பேர் கள்ளு சாப்பிடுவதும் உண்டு.
சரக்குக்கு பதிலா கள்ளு குடிக்கலாமா? Dr Sivaraman speech in Tamil | Alcohol | Kallu | Smoking Tamil
இது குறித்து மருத்துவர் சிவராமன் கூறுகையில், ‘’கள்ளுக்கும் மதுவுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. கள்ளு மலிவானது என்பதால் பலரும் அதிகம் குடித்து அதனால் பல உடல்நலக் கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர். மதுவாக இருந்தாலும் சரி கள்ளாக இருந்தாலும் சரி எதுவுமே உடலுக்கு நல்லது இல்லை’’ என்கிறார்.
மேலும், "எந்த மதுவும் உடலுக்கு நல்லது கிடையாது. புகையில் உள்ள நிக்கோட்டின் கூட புற்றுநோய் அபாயத்தை உருவாக்கும். ஒரு புகையில் 200 க்கும் மேற்பட்ட புற்றுக்காரணியை வர வைக்கும். மதுவில் இருக்கும் எத்தனால் நேரடியான புற்றுநோய் காரணியாகும்” என்றார்.