ARTICLE AD BOX
மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சிவகங்கை மாவட்டம் கிருங்காங்கோட்டை அருகே, புகையிலைப் பொருட்கள் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாகனம் கவிழ்ந்த உடனே ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். விபத்து காரணமாக, லாரியில் ஏற்றிச் சென்ற பொருட்கள் சாலையில் சிதறி கிடந்தன. இதனால், நெடுஞ்சாலையில் ஒருபுறமாக மட்டுமே வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டது.
சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறையினர் விரைந்து சென்றனர். அவர்களின் ஆரம்பக் கட்ட விசாரணையில், லாரியில் கடத்திச் செல்லப்பட்டிருந்த பொருட்கள் புகையிலைப் பொருட்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பீடி தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இலையா, அல்லது வேறு தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, விபத்துக்குள்ளான லாரியை மீட்க ராட்சச கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு, அதனை மானாமதுரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.