ARTICLE AD BOX
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்விக்கான விண்ணப்பங்கள் தொடங்கியது.
Advertisment
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தின் மூலம் 21 இளங்கலை மற்றும் 18 முதுகலை படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2024-2025ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறையில் ஏற்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள நேரடி மாணவர் சேர்க்கை மையங்கள் மற்றும் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்திலும் மார்ச் 31ம் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என இயக்குநர் முத்துபாண்டி அறிவித்துள்ளார்.