ARTICLE AD BOX
வீடுபுகுந்து விஏஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் உள்ள உரப்பனூர் கிராமத்தில் விஏஒ பொறுப்பில் இருப்பவர் முத்துப்பாண்டி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் கும்பல், முத்துபாண்டியை சரமாரியாக தாக்கியது.
காவல்துறை விசாரணை
மேலும், அவரை பயங்கர ஆயுதத்தால் வெட்டி, அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தது. முத்துபாண்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த நிலையில், குடும்பல் தப்பிச் சென்றது. பின் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர்.
இதையும் படிங்க: தூக்கத்தில் இருந்த இளைஞரை எழுப்பி கொடூரமாக கொலை; சரமாரியாக வெட்டி பயங்கரம்...! மதுரையில் பகீர்.!
கொடூர கொலை
மேலும், சம்பவத்தில் உயிரிழந்த முத்துபாண்டியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து நடத்திய விசாரணையில், சம்ரத் பீவி, ரபீக் முகமது ஆகியோர் இடப்பிரச்சனையில் விஏஒ-வை கொலை செய்தது அம்பலமானது.
அவர்களுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். அரசு ஊழியர் வீடுகுபுகுந்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #Breaking: திருப்பூரில் முதிய தம்பதி கொல்லப்பட்ட விவகாரம்; பக்கத்து வீட்டில் வசித்தவர் கைது.. மாவுக்கட்டு?.!