ARTICLE AD BOX
மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி: அன்பின் திருஉருவமே, ஆற்றலின் உறைவிடமே, பண்பின் சிகரமே, ஓய்வில்லா ஒளிவிளக்கே, வெற்றியின் நாயகனே, புன்னகை புனிதனே, தமிழக மக்கள் புகழ்பாடும் தளபதியே, ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பவரே, மத நல்லிணக்கம் கண்ட மாமனிதனே, பழநியில் முத்தமிழ் மாநாடு கண்ட முத்தமிழ் வேந்தரே, இளைஞர்களின் எழுச்சி நாயகரே, தாங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் வழி காட்ட வேண்டும். பிறந்த நாளில் பல்லாண்டு வாழ்க. பல்லாண்டு வளர்க தங்களது தமிழ் தொண்டு.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post மதுரை ஆதீனம் முதல்வருக்கு வாழ்த்து appeared first on Dinakaran.