ARTICLE AD BOX

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஒரு காமெடி நடிகராக அறிமுகமாகி இன்று ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற ஒரு நிகழ்ச்சியில் பல ஹிட் படங்களை ரீமேக் என்ற பெயரில் எந்த அளவுக்கு காமெடியாக சித்தரிக்க வேண்டுமோ அப்படி சித்தரித்து அந்த படங்களில் காமெடியாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார் சந்தானம்.
அதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழால் அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .அவரை சினிமாவிற்கு அழைத்து வந்தவர் சிம்பு .அதிலிருந்து சிம்பு நடித்த அத்தனை படங்களிலும் சந்தானம் காமெடி நடிகராக நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேலாக தானும் ஏன் ஹீரோவாக நடிக்க கூடாது என்ற ஒரு ஆசை அவருக்கு பிறந்தது.
அதன் பிறகு காமெடியை தவிர்த்து வந்தார் .ஹீரோவாக நடித்தாலும் அவருடைய படங்களில் அவர் காமெடியும் செய்து வந்தார். இருந்தாலும் மக்கள் அவரை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக ஆக்சன் ஹீரோவாக பார்க்க ஆசைப்படவில்லை .ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே அவருக்கு கை கொடுத்தது. சிவகார்த்திகேயன் மாதிரி அவரால் ஓரளவுக்கு மேல் ஜொலிக்க முடியவில்லை .
இதனால் மீண்டும் காமெடிக்கே திரும்பி விடலாமா என்ற ஒரு யோசனையில் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம். இருந்தாலும் அதில் உள்ள காமெடி இப்போது ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. காமெடியில் இருந்து ஒதுங்கி ஹீரோவாக நடித்த வந்தாலும் அவருடைய அந்த பழைய காமெடி மதகஜராஜா படத்தில் எந்த அளவு வெற்றி பெற்றது என்பதை படத்தின் வெற்றியை பார்த்து நம்மால் தெரிந்து கொள்ள முடிந்தது.

அதனால் சந்தானத்தின் காமெடி எந்த காலகட்டத்திலும் வொர்க் அவுட் ஆகும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் இந்த மதகஜராஜா. இந்த நிலையில் நடிகர் பரத்தும் சந்தானத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். பரத் தமன்னா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கண்டேன் காதலை .ஹிந்தி படத்தின் ரீமேக் தான் அந்த படம் .
ஹிந்தி வெர்ஷனில் காமெடி என்பதற்கு இடமே இருக்காது. ஆனால் தமிழில் சந்தானத்தின் காமெடிதான் படத்தை வேறொரு ட்ராக்கில் கொண்டு போனது .சந்தானத்தின் காமெடி இல்லை என்றால் படம் மிகவும் ஸ்லோவாக இருந்திருக்கும் என பரத் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.