ARTICLE AD BOX
மஞ்ச தண்ணீரில் அசிட் கலந்த சௌந்தரபாண்டி.. விறுவிறுப்பான கதைகளத்தில் அண்ணா சீரியல்!
சென்னை: இசக்கி கர்ப்பமாக இருப்பதால், அவள் குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்பதற்காக சண்முகம் கடுமையாக விரதம் இருக்கிறான். இதற்காக காவடி துக்க இருக்கும் நிலையில், இதை தெரிந்து கொண்ட சௌந்தரபாண்டி சண்முகம் காவடி தூக்கியதும் அவன் காலை கழுவி பூஜை பண்ணுவாங்க, அந்த மஞ்சள் தண்ணில ஆசிடை கலந்து விட சொல்கிறாள். அப்போது தான் அவள் கால் வெந்து போய் காவடி எடுக்க முடியாது என கணக்கு போடுகிறான்.
காவடி ரெடியாகிவிட்டதால் பாக்கியம், சௌந்தர பாண்டியனுக்கு போன் செய்து சண்முகம் காவடி எடுக்க போகிறான் என்று சொல்ல. அதை பார்ப்பதற்காக கிளம்பி வருகிறார் சௌந்தரபாண்டியன். அப்போது சனியன் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்க்க நீங்கள் போக வேண்டும் என்று கேட்க, அங்கு சண்முகம் படும் கஷ்டத்தை நான் பார்த்து சந்தோஷப்பட வேண்டும் அதற்காகத்தான் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், மறுபக்கம் உடன்குடி இரண்டாவது காவடியும் ரெடியாகி விட்டதாக சொல்ல, முத்துப்பாண்டி இரண்டாவது காவடி யாருக்கு என கேட்கிறான், கொஞ்ச நேரம் பொறுங்க உங்களுக்கே தெரியும் என சொல்கிறான். சௌந்தரபாண்டி காரில் வந்து இறங்குகிறான். அப்போது, சௌந்தரபாண்டி ரவுடிகளுக்கு தண்ணீரில் ஆசிடை கலக்க சொல்லி கண் காட்டுகிறார். ரவுடிகளும் அதை கச்சிதமாக செய்துவிட, இரண்டாவது காவடி யாருக்கு என்று கேட்க சண்முகம் உங்களுக்கு தான் என்று சொல்ல சௌந்தரபாண்டி, நான் எதுக்கு காவடி எடுக்கணும்? அதெல்லாம் எடுக்க முடியாது என்று சொல்கிறார்.

சண்முகம் போட்ட பிளான்: என் தங்கச்சிக்காக மாமா நானே எடுக்கிறேன், உங்க வீட்டு வாரிசுக்காக நீங்க எடுக்க மாட்டீங்களா என்று கேள்வி கேட்டு மடக்குகிறான். மேலும், அந்த கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு சாமி வர, அப்போது சண்முகத்திற்கு நேரம் நன்றாக இருக்கிறது. ஆனால், சௌந்தரப்பாண்டிக்குத்தான் நேரம் சரியில்லை, அலகு குத்தி காவடி எடுத்து என் எல்லைக்கு வரணும், அப்போது அந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராது என்று வாக்கு கொடுக்க சௌந்தரபாண்டி ஷாக்.ஆகிறார். அதெல்லாம் முடியாது என்று சௌந்தரபாண்டி சொல்ல, அனைவரும் சேர்ந்து அவருக்கு அலகு அவரை பிடித்து அலகு குத்தி காவடியை தூக்கி கொடுக்கின்றனர், இதையடுத்து, ஆசிட் கலந்த தண்ணீரை சௌந்தரபாண்டி காலில் ஊர்த்தி பூஜை செய்ய, அவர் எகிறி குதித்துவிட அது பாண்டியம்மா காலில் பட்ட, அவள் அய்யோ எரியுதே எரியுதே என்று கத்துகிறாள். எல்லாரும் மஞ்ச தண்ணீர் எப்படி எரியும் என்று கேட்க பாண்டியம்மா அதெல்லாம் சொன்னா புரியுது என்று சொல்கிறாள்.
வசமாக சிக்கிய சௌந்தரபாண்டி: சௌந்தரபாண்டி ஏற்பாடு செய்திருந்த அடியாட்கள், இரண்டு பேர் காவடி தூக்கி வந்ததால், யாரை வம்பு இழுப்பது என்று தெரியாமல் குளம்புகின்றனர். அப்போது, அதில் ஒருவர் அழகு, குத்தியும் வருபவரைத்தான் சௌந்தரபாண்டி, சார் வம்பு இழுக்க சொன்னதாக சொல்ல, நாக்கில் அழகு குத்தி வந்த சௌந்தரபாண்டியை ரௌடிகள் துன்புத்தி வருகின்றன. இதை தொலைவில் இருந்து பார்த்த சனியன், ஐயோ இவர்தான் சௌந்தர பாண்டி என்று தெரியாமல் அவரையே ரவுடிகள் வம்பு இழுக்கிறார்களே என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்.
பிறகு சண்முகமும் காவடி எடுத்து கொண்டு நல்லபடியாக கோவிலுக்கு வந்து வேண்டுதலை முடிக்க இசக்கி, எமோஷனலாகிறாள். சண்முகம் இது என்னுடைய கடமை என அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். அடுத்ததாக அலகு குத்தியதால் பேச முடியாமல் இருக்கும் சௌந்தரபாண்டி, என் மகன் பரணி இந்த விஷயத்தை சொல்றதுக்காக தான் அப்பா வேண்டாம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டே இருந்தா, நான் தான் அது தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன். ஆனா இந்த பாக்யாவுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சும் வேணும்னே என்ன இப்படி மாட்ட விட்டுட்டாலே என்று புலம்புகிறான்.

ஆத்திரத்தில் சண்முகம்: வலியால் சௌந்தர பாண்டியன் படும் வேதனையை பார்த்து சண்முகம் சிரித்துக் கொண்டிருக்க, அதை பார்த்து சௌந்தரப்பாண்டி, ஆத்திரமடைகிறான். இவனுக்கு விஷயம் எல்லாம் தெரிந்து தான் வேண்டும் என்றே என்னை காவடி தூக்க வைத்து விட்டான் என்று, சனியனிடம் சொல்ல, ஆமா, ஐயா ஆரம்பத்தில் இருந்து சண்முகம் உங்கள பாத்து சிரிச்சுக்கிட்டே தான் இருக்காரு. அவருக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சதுனால தான் உங்கள காவடி எடுக்க வச்சு மாட்டி விட்டுட்டாரு என்று சொல்ல ஆத்திரப்படும் சௌந்தரபாண்டி, அந்த சண்முகத்தை சும்மா விட கூடாது என ஆவேசப்பட சனியன் ஆரம்பத்தில் இருந்து இதை தான் சொல்லிட்டு இருக்கீங்க என்று கலாய்க்கிறான்.
இதைத்தொடர்ந்து பரணி, விசா இன்டெர்வியூ அட்டென்ட் செய்ய சென்னைக்கு வர சொல்லி லெட்டர் வருகிறது. இதைப்பார்த்து திட்டம் போடும் சௌந்தரபாண்டி, இதை வைத்து பரணியை சென்னைக்கு அனுப்பி அப்படியே அமெரிக்கா அனுப்பி வைக்க திட்டம் போடுகிறார். பின் சிவபாலனை சண்முகத்தின் வீட்டுக்கு அனுப்பி பரணியை அழைத்துவரும் படி சொல்கிறான். பின் பரணி வீட்டுக்கு வந்து என்ன விஷயம் என்று கேட்க, உனக்கு விசா இன்டெர்வியூக்கு லட்டர் வந்து இருக்கு, அதை அங்கே நான் கொண்டுவந்து கொடுத்த இந்த சண்முகம் ஏதாவது பிளான் போட்டுவிடுவான். அதான் வீட்டுக்கு வர வர சொன்னேன்.
தங்கச்சிமேல தான் பாசம்: அந்த வெறும் பயமகன் சண்முகத்திற்கு தங்கச்சிங்க மேல தான் பாசமா இருக்கான்? இசக்கிக்காக விரதம் இருக்கான் காவடி தூக்குறான் உன்னை பத்தி அவன் யோசிக்கிறதே இல்லை. நீ தான் சண்முகம்னு அவன் பின்னடியே இருக்க, நீ அமெரிக்கா போக போறியா? இல்லையா... உன் முடிவை மாத்திக்க போறியா? என்று கேட்க பரணி, என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை, சண்முகம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் அமெரிக்கா போகும் முடிவில் உறுதியா தான் இருக்கிறேன் என்று அந்த கடிதத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறான்.
சௌந்தரபாண்டியும், பரணியும் பேசிக்கொண்டு இருப்பதைப்பார்த்த பாக்கியம், பரணி ஏன் இப்படி மாறிவிட்டாள், இந்த மனுஷனைப்பத்தி நல்ல தெரிந்தும் இப்படி செய்கிறாளே என நினைத்து வருத்தப்படுகிறாள். அதே நேரம் சௌந்தரப்பாண்டி, இதுதான் சரியான நேரம், பரணியை சென்னைக்கு அனுப்பிவைத்துவிட்டு, அவளை அப்படியே அமெரிக்காவிற்கு அனுப்பிவிடவேண்டும் என்று திட்டம் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.