மக்களுக்கு தமிழக அரசின் சர்ப்ரைஸ் கிப்ட்! மகளிர் உரிமைத் தொகைக்கு ஆவணம் தேவையில்லையாம்

14 hours ago
ARTICLE AD BOX

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பெற வருமான வரிச்சான்றிதழைக் கட்டாயம் இணைக்க வேண்டுமா என்பது தொடர்பான சந்தேகத்திற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மக்களுக்கு தமிழக அரசின் சர்ப்ரைஸ் கிப்ட்! மகளிர் உரிமைத் தொகைக்கு ஆவணம் தேவையில்லையாம்

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அதன்படி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் மாநில அரசுகளால் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் இந்த திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி

ரேஷன் கார்டுகளின் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த முறை விடுபட்ட தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்களும் இந்த முறை விண்ணப்பிக்கலாம்.

மகளிர் உரிமைத் தொகை

விண்ணப்பிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரின் வீட்டிற்கும் அந்தந்தப் பகுதி தாசில்தார் நேரில் வந்து பார்வையிட்டு விண்ணப்பதாரர் திட்டத்தில் பயன்பெறத் தகுதியானவர் தானா என்பதை உறுதிப் படுத்துவார். அதன் அடிப்படையில் விண்ணப்பதாரருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதி

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். புன்செய் நிலமாக இருந்தால் 10 ஏக்கருக்குள்ளும், நன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கருக்குள்ளும் வைத்திருக்கலாம். ஆண்டுக் வீட்டு மின்சார உபயோகம் 3600 யூனிட்டுகளைத் தாண்டக் கூடாது. குடும்ப வருமானத்திற்கு தனியாக வருமானச் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொழில் வரி செலுத்துவோர், சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ப்பிக்க முடியாது. உரிமைத் தொகை விண்ணப்பத்துடன் வருமானச் சான்றிதழை இணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

Read Entire Article