ARTICLE AD BOX
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததையடுத்து மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தார்.
இதையும் படிக்க | புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்!
இதுகுறித்து விவாதிக்க அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி மறுத்ததால் திமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையிலும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவினால் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாக தமிழக அரசு கூறி வருகிறது.
தென் மாநிலங்களில் தொகுதி குறைய வாய்ப்புள்ளதால் தென் மாநில முதல்வர்கள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிக்க | வெந்நீர் குடித்தால் தொப்பை குறையுமா?