ARTICLE AD BOX
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் 2026ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படும் போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் அனைவர் மத்தியிலும் நிலவுகிறது. இந்த அச்சத்தைப் போக்க வேண்டிய ஒன்றிய அரசு, மக்களிடம் மேலும், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை வெளியிடக் கூடாது.
மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்வது சரியானது அல்ல. உள்துறை அமைச்சர் அமித்ஷா இது தொடர்பாக அளித்துள்ள விளக்கம் தெளிவாக இல்லை. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.20% தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்.
அதேநேரத்தில் மக்களவைத் தொகுதிகளின் மறுவரையறையை எந்த அடிப்படையில் செய்வது என்பது குறித்து எந்த முடிவையும் ஒன்றிய அரசு இன்னும் எடுக்கவில்லை. அது தெரியாமல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இந்த விவகாரத்தில் தெளிவான முடிவை எடுக்க முடியாது. ஒன்றிய அரசின் முடிவை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் உத்திகளை வகுப்பது தான் சரியானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். இருப்பினும், தமிழக அரசின் சார்பில் மார்ச் 5ஆம் தேதி நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பங்கேற்கும்.
The post மக்களவை தொகுதிகள் தொடர்பாக அமித்ஷா அளித்துள்ள விளக்கம் தெளிவாக இல்லை: ராமதாஸ் அறிக்கை appeared first on Dinakaran.