ARTICLE AD BOX
Pinarayi Vijayan opposes Lok Sabha constituency redelineation :மக்களவை தொகுதி மறுவரையறை முடிவை மத்திய அரசு முன்னெடுத்து செல்வதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டை அமல்படுத்திய மாநிலங்களை தண்டிக்க கூடாது என்று முதல்வர் வலியுறுத்தினார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை அவசரமானது என்று செய்திக்குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தென்னிந்திய மாநிலங்களின் கவலையை போக்க வேண்டும் என்றும், ஒருமித்த கருத்தின் மூலம் மத்திய அரசு இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
ரயில்களில் வழங்கப்படும் உணவு! மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்! பயணிகளுக்கு இனி கவலையில்லை!
முதல்வர் பினராயி விஜயன்:
எந்த மாநிலத்தின் தற்போதைய தொகுதி பங்கீட்டிலும் குறைவு வராத வகையில் மறுவரையறை செய்யப்பட வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படும் நிலை இருக்கக்கூடாது. சுதந்திரத்திற்கு பிறகு மத்திய அரசுகள் கொண்டு வந்த மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்கள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு கொள்கைகளுக்கு ஏற்ப மக்கள் தொகையை குறைத்த மாநிலங்களுக்கு பாராளுமன்றத்தில் விகிதாசார பிரதிநிதித்துவத்தில் குறைவு செய்வது அநீதியாகும். இதில் தவறிய மாநிலங்களுக்கு பரிசு வழங்குவதற்கு சமமாகும்.
வெகுஜன திருமண திட்டத்தில் மணமகளுக்கு ரூ.1 லட்சம்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!
1952, 1963, 1973 ஆகிய ஆண்டுகளில் நாட்டில் ஏற்கனவே தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. ஆனால், 1976ல் 42வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் இந்த செயல்முறை 2000க்கு பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2001) வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காக இது செய்யப்பட்டது. மாநிலங்களுக்கு இடையில் மக்கள் தொகை விஷயத்தில் சமத்துவமின்மை தொடர்ந்ததால் 84வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் இந்த நிறுத்தி வைப்பு 2026க்கு பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2031) வரை நீட்டிக்கப்பட்டது. அந்த சூழ்நிலை இன்னும் உள்ளது. அதை கணக்கில் எடுக்காமல் மத்திய அரசு அவசரமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
சம்பல் உண்மை வெளிவந்தால் மக்களுக்கு பதில்கள் இல்லாமல் போய்விடும்: யோகி ஆதித்யநாத்!
தென்னிந்திய மாநிலங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய பாராளுமன்ற தொகுதிகளின் சதவீதத்தை அடிப்படையாக கொண்டா அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டா இந்த விகிதாச்சார விநியோகம் செய்யப்படுகிறது என்ற விஷயத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை. இந்த இரண்டு வழிகளில் தென்னிந்திய மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவ இழப்பு ஏற்படும். தென்னிந்திய மாநிலங்களின் கவலையை தீர்க்க மத்திய அரசு தயாராக வேண்டும். ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை தவிர்த்து ஜனநாயகத்தையும் கூட்டாட்சியின் சாரத்தையும் காக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்.