மகா சிவராத்திரி விழா: காசி விஸ்வநாதர் கோவிலில் 11 லட்சம் பக்தர்கள் தரிசனம்

3 hours ago
ARTICLE AD BOX

வாரணாசி:

சிவபெருமானை போற்றி வழிபடும் முக்கிய பண்டிகையான மகா சிவராத்திரி விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவாலயங்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சிவபெருமானை தரிசனம் செய்தனர். நேற்று மாலை தொடங்கி விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதான கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவ்வகையில், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். மாலையில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்தது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று, சிவபெருமானை பிரார்த்தனை செய்து பாரம்பரிய முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 11.69 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்த போதுமான ஏற்பாடுகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்வதை எளிதாக்குவதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


Read Entire Article