ARTICLE AD BOX
ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள கோயில் மகா சிவராத்திரி தினத்தில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் மூதாட்டியின் வீரச் செயல் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி அன்று பக்தர்களின் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும்.
அங்கு வருகிற பக்தர்களுக்கும் சுவாமிக்கும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நெய்யில் கையால் அப்பம் செய்து கொடுப்பதை விஷேச நிகழ்வாக செய்து வருகிறார்கள்.
மூதாட்டியின் வீரச் செயல்
அந்த வகையில், கடந்த புதன் கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு 12 மணிக்கு ஊரணிபட்டியை சேர்ந்த முத்தம்மாள்(90) என்ற மூதாட்டி அப்பம் சுட்டார்.
அத்துடன் நிறுத்தாமல் அங்கு வருகை தரும் பக்தர்களுக்கு நெய்யால் நெற்றியில் திலகமிட்டு ஆசிர்வாதமும் வழங்கியுள்ளார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு 48 நாட்கள் விரதமிருக்கும் முத்தம்மாள், அம்மனுக்கு சாற்றிய புடவையை அணிந்து, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் செய்து வருகிறார். அந்த அப்பம் அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
குறித்த சம்பவம் இணையவாசிகள் பலரின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், மூதாட்டியின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |