ARTICLE AD BOX
பாகிஸ்தான் மாநிலம் ஐதராபாத்தில் சீமா ஹைதர்(32), குலாம் ஹைதர் என்று தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் பப்ஜி விளையாட்டு மூலம் சீமாவுக்கும், உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளிடைவில் காதலாக மாறி உள்ளது. குழந்தைகளுடன் நேபாளம் சென்று சச்சினை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் கடந்த 2023ம் ஆண்டு சச்சின், சீமா மற்றும் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு சட்ட விரோதமாக இந்தியா வந்தார். அதன் பின் அவர்கள் நொய்டாவில் வாடகை வீட்டில் வசித்தனர். இதை அறிந்து அதிகாரிகள் சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதேபோன்று அவர் தான் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை என்றும் சச்சினை திருமணம் செய்து கொண்டு இந்த மதத்திற்கு மாறிவிட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து அவர்கள் தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். தற்போது சீமா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு 51 லிட்டர் பசும்பாலை சீமா நேர்த்தி கடனாக வழங்க உள்ளார். சீமாவும் அவரது கணவர் சச்சினும் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதால் மகா கும்பமேளாவுக்கு செல்ல முடியவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு 51 லிட்டர் பசும்பாலை நேர்த்திக்கடனாக வழங்க உள்ளோம் என்று சீமாவும் அவரது கணவரும் தெரிவித்துள்ளனர்.