ARTICLE AD BOX
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகளும் சங்கமிக்கும். இந்த இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மிகவும் பிரசித்தி பெற்ற கும்பமேளா என்ற நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சி 45 நாட்கள் நடைபெறும். இதில் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி ஜனவரி 12ம் தேதி தொடங்கிய நிலையில், பிப்ரவரி 26ம் தேதி முடிவடையும். ‘மகாகும்ப் 2025’ என்று நிகழ்ச்சி 4000 ஹெக்டர் பரப்பளவில் நடைபெறுகிறது. உத்திரபிரதேச அரசு இந்த நிகழ்ச்சிக்காக 7500 கோடி ரூபாய் வசூல் செலவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் 2 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்படும் என்று உத்திரபிரதேச தொழில் மேம்பாடு அமைச்சர் நந்த கோபால் குப்தா நந்தி கணித்துள்ளார். இதற்கிடையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியை தனது சந்தைகளமாக பயன்படுத்தி வருகிறது. அங்கு வருபவர்களிடம் தங்களது பொருட்களையும், சேவைகளையும் விளம்பரப்படுத்த பல கோடி ரூபாய்களை நிறுவனங்கள் இங்கு வாரி வழங்கி வருகின்றது. டெட்டால், டாபர், பெப்சிகோ, கொக்கோகோலா உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளும் ITC மற்றும் ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் முகாம் அமைத்துள்ளனர்.
அங்கு தங்கள் தயாரிப்புகளை வரிசைப்படுத்தி மாதிரிகள் மற்றும் குளிர்பானங்களை வைத்து விநியோகித்து வருகின்றனர். இதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் சுமார் 3600 கோடிகள் செலவு செய்துள்ளது. அதோடு இந்த நிகழ்ச்சிகளில் சேர்க்கை நுண்ணறிவு தீம்கள், led திரைகள், மெய்நிகர் மற்றும் மொபைல் மூலம் விளம்பரம் செய்வதற்கான 1800 முதல் 2000 கோடு ரூபாய் செலவு இதில் அடங்கும்.