ARTICLE AD BOX
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பன்வெல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் 37 வயதுடைய பெண்மணிவசித்து வருகிறார்.
இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. மைதிலிக்கு 8 வயதுடைய மகள் இருக்கிறார். இனிடையே, இன்று காலை நேரத்தில், சுமார் 8 மணிக்கு மைதிலி அடுக்குமாடி குடியிருப்பின் 29 வது மாடிக்கு சென்றுள்ளார்.
தாய் - மகள் தற்கொலை
பின் அங்கு தனது மகளை கீழே தள்ளிவிட்டு கொலை செய்தார். பின் தானும் கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். 29 வது மாடியில் இருந்து கீழே விழுந்த இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது சோகம்; 5 தொழிலாளர்கள் பலி.!
தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு வியந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடும் இரயிலில் நிலைதடுமாறி சோகம்.. நொடியில் உயிர்தப்பிய பெண்மணி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!