ARTICLE AD BOX

கிறிஸ்ட்சர்ச்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு மகளிர் அணிக்கெதிராக தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.தொடர்ந்து இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக சமாரி அத்தபத்து மற்றும் விஷ்மி குணரத்னே ஆகியோர் களம் கண்டனர். இதில் விஷ்மி குணரத்னே ரன் எடுக்காமலும், அத்தபத்து 23 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் கண்ட ஹர்ஷிதா சமரவிக்ரமா 11 ரன், கவிஷா தில்ஹரி 11 ரன், மனுடி நனயக்கரா 35 ரன், நிலாக்ஷி டி சில்வா 20 ரன், சுகண்டிகா குமாரி 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ப்ரீ ல்லிங். ஜெஸ் கெர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து விளையாடியது.
தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ் 47 ரன் எடுத்து அவுட்டானார்.பொறுப்புடன் ஆடிய புரூக் ஹாலிடே 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.இறுதியில், நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.