ARTICLE AD BOX
இந்தியாவில் மகளிர் ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 24ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யூபி வாரியர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற யூபி முதலில் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 180-6 ரன்கள் குவித்தது.
அந்த அணிக்கு கேப்டன் மந்தனா 6, ரிச்சா கோஸ் 8 கனிகா அகுஜா 5, ஜார்ஜியா 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் எலிஸ் பெரி அதிரடியாக விளையாடி 90* (56), டேனியல் வைட் 57 (41) ரன்கள் எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக 181 ரன்களை துரத்திய யூபி அணிக்கு கிரண் நவ்கிர் 24 (12) ரன்களை அதிரடியாக எடுத்தார்.
யூபி போராட்டம்:
ஆனால் விருந்தா தினேஷ் 14, தஹிளா மெக்ராத் 0, கிரேஸ் ஹரிஷ் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆடரில் ஸ்வேதா செராவத் 31, உமா சேத்ரி 14, சைமா தாகூர் 14 ரன்களில் போராடி அவுட்டானார். அதனால் ரேணுகா சிங் வீசிய கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட போது சோபி எக்லஸ்டன் 0, 6, 6, 4, 1 என அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு 33 (19) ரன்கள் விளாசி கடைசி பந்தில் ரன் அவுட்டானார்.
அதனால் 20 ஓவரில் யூபி 180 ரன்கள் எடுத்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது. பெங்களூருவுக்கு அதிகபட்சமாக ரேணுகா சிங் 2, கிம் கிராத் 2, ஸ்னே ராணா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக மகளிர் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் முதலில் விளையாடிய யூபி 8 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆர்சிபி எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
த்ரில் வெற்றி:
அடுத்ததாக சோபி எக்லஸ்டன் வீசிய சூப்பர் ஓவரில் ரிச்சா கோஸ் 2, கேப்டன் மந்தனா 3 ரன்கள் எடுத்ததால் ஆர்சிபி 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் மகளிர் ஐபிஎல் வரலாற்றில் முதல் சூப்பர் ஓவரில் யூபி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி சாதனை படைத்தது. அந்த வகையில் சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி சொதப்பலாக விளையாடி தோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: 383 கோடி செலவு.. இந்தியாவால் வெறும் 5 நாட்களில் பரிதாபமாக நொறுங்கிய பாகிஸ்தானின் 29 வருட கனவு
குறிப்பாக கேப்டன் மந்தனா பேட்டிங் செய்வதில் சுமாராக விளையாடியதால் தோல்வி கிடைத்தது. அதனால் 4 போட்டிகளில் அந்த அணி 2வது தோல்வியையும் பதிவு செய்தது. மறுபுறம் த்ரில் வெற்றி பெற்ற யூபி வாரியர்ஸ் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முன்னேறி வருகிறது.
The post மகளிர் ஐபிஎல்: வெறும் 8 ரன்ஸ்.. சூப்பர் ஓவரில் சொதப்பிய ஆர்சிபி.. யூபி த்ரில்லர் சாதனை வெற்றி appeared first on Cric Tamil.