மகளின் திருமணத்தை அவசர அவசரமாக முடிக்க காரணம் இதுதானா? 3வது திருமணத்திற்கு ரெடியான நடிகர்!

3 hours ago
ARTICLE AD BOX

மகளின் திருமணத்தை அவசர அவசரமாக முடிக்க காரணம் இதுதானா? 3வது திருமணத்திற்கு ரெடியான நடிகர்!

News
oi-Jaya Devi
| Published: Monday, February 3, 2025, 21:11 [IST]

சென்னை: தங்கல் படத்தின் வெற்றிக்கு பிறகு அமீர்கான் நடிப்பில் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான், லால் சிங் சத்தா உள்ளிட்ட படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இதனால், சில ஆண்டுகள் நடிக்கப் போவதில்லை என கூறியிருந்த அமீர்கான், தனது அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் வசித்து வருகிறார். தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வரும் அமீர் கான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்ட அமீர்கான் இந்தி ஆடியன்சுகளுக்கு மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கும் நன்கு தெரிந்த நடிகர் ஆவார். இவர் நடித்த, ரங்கீலா, ராஜா ஹிந்துஸ்தானி, பிகே, தங்கல் என பல வெற்றிப்படத்தை கொடுத்த அமீர் கான். 1986ம் ஆண்டு தயாரிப்பாளர் ரீனா தத்தாவை திருமணம் செய்து கொண்டார். 16 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிகள் திடீரென விவாகரத்து செய்தார். அமீர் கான் - ரீதா தத்தா தம்பதியினருக்கு இரா கான், ஜுனைத் கான் என ஒரு மகளும்,ஒரு மகனும் உள்னனர்.

aamir khan bollywood

நடிகர் அமீர் கான்: இதைத்தொடர்ந்து, இரண்டாவதாக கிரண் ராவை திருமணம் செய்து கொண்டார் ஆமிர்கான். இந்த தம்பதிகளுக்கு வாடகைத் தாய் மூலம் ஆசாத் என்கிற ஒரு மகன் பிறந்த நிலையில் இருவரும், கணவன் - மனைவியாக வாழப் போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர். இதையடுத்து, தங்கல் படத்தில் அமீர்கானுக்கு பெண்ணாக நடித்தவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்தியும் இணையத்தில் வெளியானது.

3வது திருமணம்: இந்த நேரத்தில், அமீர் கானின் மகள் இரா கானுக்கும், நுபுர் ஷிகாரே என்பவருக்கும் மும்பையில் தாஜ் லேண்ட்ஸ் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து, உதய்பூரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். தற்போது, நடிகர் அமீர் கான் மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகி விட்டதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. நடிகர் அமீர்கான் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் விரைவில் அவரைத் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பாலிவுட் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்குத்தான் மகளின் திருமணத்தை அவசர அவசரமாக செய்தாரா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

aamir khan bollywood

கூலி படத்தில்: நடிகர் அமீர் கான், தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார். கூலி படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் நிலையில், அமீர்கான் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

aamir khan bollywood

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Bollywood actor aamir khan is ready for third marriage, பாலிவுட் நடிகர் அமீர்கான் மூன்றாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டார். இரண்டு முறை விவாகரத்து செய்த அமீர் கான் தற்போது அம்மாவுடன் வசித்து வருகிறார்
Read Entire Article