ARTICLE AD BOX
அதிக சத்துள்ள காய்கறிகளில் ஒன்றான ப்ரோக்கோலியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மையை பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் அதிகப்படியான நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன் ப்ரோக்கோலியில் குறைவான கலோரி கொண்ட காய்கறியாக இருப்பதுடன், குறைவான கொழுப்புகளையும் கொண்டுள்ளது.
Image: Simply Recipes / Adobe Stock
ப்ரோக்கோலியில் இருக்கும் ரசாயனங்களான சல்பரோபேன் மற்றும் இன்டோல் 3 கார்பினால் புற்றுநோய்க்கு எதிரான விளைவுகளை கொண்டிருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி போன்றவை உடலில் ஏற்படும் அழற்சிகளை குறைப்பதுடன் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.
குறைவான கார்போஹைட்ரேட்கள் மற்றும் அதிகப்படியான நார்ச்சத்து டைப் 2 நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களின் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு உதவுகின்றது.
மேலும் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, குறைவான கலோரி வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரம் கொடுத்து உடல் எடையை நிர்வகிக்க உதவுகின்றது.
PHOTO: CHRISTINE KEELEY
ப்ரோக்கோலியில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்களான தாமிரம், துத்தநாகம் சரும ஆரோக்கியத்தை தக்க வைக்கவும் உதவுகின்றது.
இதனை சாப்பிடுவதால் கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சி பாதிப்புகள் தடுக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |