போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?

1 day ago
ARTICLE AD BOX

புனேவில் பேருந்துக்காக காத்திருந்த 26 வயது பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்று கொண்டிருந்தபோது, ஒரு நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். காவல் நிலையத்தில் இருந்து 100 கீமி தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை:

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. டெல்லி, கொல்கத்தா என முக்கிய நகரங்களில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்த நிலையில், மற்றொரு முக்கிய நகரத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று காலை பேருந்தில் வைத்து 26 வயது பெண் ஒருவரை தத்தாத்ரேய ராம்தாஸ் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிசிடிவி மூலம் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால், இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. அவரைக் கண்டுபிடிக்க போலீசார் எட்டு சிறப்பு படைகளை அமைத்துள்ளது. மோப்ப நாய் பிரிவும் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. 36 வயதான ராம்தாஸ் ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்டவர்.

நடந்தது என்ன?

சம்பவம் குறித்து விவரித்த காவல்துறை தரப்பு, "சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான பால்டனுக்குச் சென்று கொண்டிருந்த வீட்டு வேலை செய்யும் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பேருந்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என ராம்தாஸ் கேட்டுள்ளார். பின்னர், அவர் செல்ல வேண்டிய பேருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருப்பதாக பெண்ணிடம் ராம்தாஸ் கூறியுள்ளார். அங்கு வெளிச்சம் இல்லாததால் பெண் தயங்கியுள்ளார்.

மற்ற பயணிகள் தூங்கிக் கொண்டிருப்பதால் இருட்டாக இருப்பதாக கூறிய ராம்தாஸ், அந்த பெண்ணை தானே அழைத்து சென்றுள்ளார். பேருந்துக்குள் நுழைந்ததும், உள்ளே குதித்து, கதவைப் பூட்டி, அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்" என்றார்.

மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படிக்க: Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது

Read Entire Article