போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

22 hours ago
ARTICLE AD BOX
Pakistan vs Bangladesh Match abandoned due to rain

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், ஒரு பந்துகூட வீசப்படாமல், டாஸ் கூட போடாமல் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில், போட்டி தொடங்கவுதற்கு முன்பு இருந்தே மதியம் முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது, மழை ஓய்ந்தபாடில்லை. மேலும் மைதானத்தின் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போட்டியை நடத்தவும் வாய்ப்பு இல்லை, இறுதியில் நடுவர்கள் போட்டியை ரத்து செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் 1-1 புள்ளிகள் வழங்கப்பட்டன.

இரு அணிகளும் மோதிய, இரு போட்டியிலலும் ஒரு போட்டியை கூட வெற்றி பெறாமல், தோல்வியை தழுவியது. இப்படி இருக்கையில், இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த கடைசி போட்டியிலாவது இருவரில் யாராவது வெற்றி பெறுவதாக எதிர்பார்க்கப்பட்டது.

இறுதியில், குறுக்கே இந்த கவுசிக் வந்தால் போல், மழை குறுக்கிட்டு போட்டியில் மழையே வெற்றி பெற்றது. இருந்தாலும், போட்டி நடந்தால், ஒரு அணிக்கு மட்டுமே வெற்றி பாய்ண்ட் கிடைத்திருக்கும். இப்பொழுது இருவருக்கும் சமமாக ஆறுதல் பாய்ண்ட் கிடைத்துள்ளது.

குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும், ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் கைவிடப்பட்ட இந்த ஆட்டத்தில் இருந்து பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டு தொடரில் இருந்து வெளியேறுகிறது.

இந்தத் தோல்வியின் மூலம், பாகிஸ்தான் ஒரு அவமானகரமான சாதனையையும் படைத்துள்ளது. அதாவது, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில், ஒரு நாடு போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்று, ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் போனது இதற்கு முன்பு நடந்ததில்லை. இப்பொது, பாகிஸ்தான் அந்த வேதனையை அனுபவிக்க வேண்டிய கட்டாயமாகியது.

Read Entire Article