போட்டி போட்டு விலை உயரும் அதானி குழும பங்குகள்.. எந்த பங்கை வாங்கினால் ஜாக்பாட்?

9 hours ago
ARTICLE AD BOX
  Market update

போட்டி போட்டு விலை உயரும் அதானி குழும பங்குகள்.. எந்த பங்கை வாங்கினால் ஜாக்பாட்?

Market Update

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் மிகவும் உற்சாகமாக தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் மற்றும் நிப்டி 50 தலா 0.50 சதவீதம் ஏற்றம் கண்டது. சீனா நுகர்வை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது போன்ற சர்வதேச நிலவரங்கள், கடந்த பிப்ரவரியில் சில்லரை விலை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. அதேவேளையில், கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தை சேர்ந்த பத்து நிறுவன பங்குகளின் விலையும் ஏற்றம் கண்டது. இது அதானி குழும நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை புதுப்பிக்கும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதானி குழும நிறுவன பங்குகள் தற்போது சிறிது உயர்ந்து இருப்பது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே அதானி கிரீ்ன் எனர்ஜி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.76 சதவீதம் உயர்ந்து ரூ.906.80ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே அதானி எண்டர்பிரைசஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.49 சதவீதம் அதிகரித்து ரூ.2,255.05ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.43 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.1,135ஆக இருந்தது.

போட்டி போட்டு விலை உயரும் அதானி குழும பங்குகள்.. எந்த பங்கை வாங்கினால் ஜாக்பாட்?

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.46 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.794.15ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே அதானி வில்மர் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.23 சதவீதம் உயர்ந்து ரூ.249.95ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே அதானி பவர் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.51 சதவீதம் உயர்ந்து ரூ.514.55ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே அதானி டோட்டல் கேஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.69 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.607.10ஆக இருந்தது.மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே என்டிடிவி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.23 சதவீதம் உயர்ந்து ரூ.117.80 வரை சென்றது.மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே அம்புஜா சிமெண்ட் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.99 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.491.00ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஏசிசி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.98 சதவீதம் உயர்ந்து ரூ.1,873.30ஆக இருந்தது.

அதானி குழும பங்குகளின் தற்போதைய உயர்வால் குறுகிய கால வர்த்தகர்கள் பயனடையக் கூடும். இருப்பினும் நீண்ட கால முதலீட்டாளர்கள் தனிப்பட்ட பங்குகளை கவனமாக மதிப்பீடு செய்து முதலீடு செய்ய வேண்டும். தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால், அதானி போர்ட்ஸ் பங்குகளை வாங்கலாம் என்று மதிப்பீடு செய்துள்ளது. இப்பங்கின் இலக்கு விலையாக ரூ.1,400 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சியை காட்டிலும் அதிக வளர்ச்சி மற்றும் சந்தை பங்கை அதிகரிக்க இந்நிறுவனம் நல்ல நிலையில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தரகு நிறுவனமான கேன்டர் ஃபிட்ஸ்ஜெரால்ட், அதானி பவர் நிறுவன பங்குக்கு ஓவர்வெயிட் மதிப்பீட்டை வழங்கியுள்ளது. அதாவது உங்கள் போர்ட்ஃபோலியாவில் இந்நிறுவன பங்கை கூடுதலாக வாங்கி சேர்க்கலாம் என்று அர்த்தம். இப்பங்கின் விலை ரூ.595 வரை செல்லும் என்று கேன்டர் ஃபிட்ஸ்ஜெரால்ட் கணித்துள்ளது. ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் அண்மையில் அதானி பவர் நிறுவன மீதான கவரேஜை மீண்டும் வாங்கலாம் என்று மதிப்பீடு செய்தது. மேலும் டிசிஎஃப் அடிப்படையிலான இப்பங்கின் இலக்கு விலை ரூ.600ஆக கணிக்கப்பட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்கள் குறித்து எஸ்எம்சி குளோபல் செக்யூரிட்டீஸின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் சீமா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் போன்ற முக்கிய நிறுவனங்கள் மிதமான வருவாய் வளர்ச்சி காட்டின. ஆனால் அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள். ஒழுங்குமுறை அழுத்தங்கள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கம் ஆகியவை அவற்றின் ஒட்டு மொத்த லாபத்தை பாதித்தன. எரிசக்தி உற்பத்தி திறன் அதிகரித்த போதிலும், அதானி கிரீன் எனர்ஜி அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் அதிகரித்து வரும் செலவுகளுடன் சவால்களை எதிர்கொண்டது. ஒழுங்குமுறை தடைகள் மற்றும் இயற்கை எரிவாயு விலை நிர்ணயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அதானி டோட்டல் கேஸ் சிறிது லாப சரிவை கண்டது.

அதேசமயம் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் மீள்தன்மையை வெளிபடுத்தியது. சரக்கு அளவுகளில் நிலையான வளர்ச்சியுடன், தளவாடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலித் துறைகளில் வலுவான தேவையால் பயன் அடைந்தது. இருப்பினும் குழுமத்தின் உயர் நிர்வாகிகளை சுற்றியுள்ள சட்ட மற்றும் ஒழுங்குமுறை ஆய்வு காரணமாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பொதுவாக பங்குகளில் முதலீடு செய்யும் போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடாலடியாக முதலீடு செய்யக்கூடாது. நிறுவன பங்குகளை நல்ல ஆய்வு செய்து தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது புத்திசாலித்தனமானது.

Disclaimer:

This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Read Entire Article