ARTICLE AD BOX
போடு வெடிய.. வெற்றிமாறனின் விடுதலை 2.. அந்த மொழியிலும் ரிலீஸாகுதா?
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், இளவரசு, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் விடுதலை 2. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2023ஆம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவர் இதுவரை இயக்கியிருக்கும் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை ஆகிய அனைத்து படங்களுமே ஹிட்டடித்தவை. ஹிட் என்பதோடு மட்டுமின்றி சமூககத்தில் பெரும் விவாதத்தை கிளப்பக்கூடியவை அவரது படைப்புகள்.உதாரணமாக அசுரன் படம் வந்த பிறகு பஞ்சமி நிலம் பற்றிய விவாதங்கள் சமூகத்தில் அதிகளவு எழுந்தன. அதேபோல் விசாரணை வந்தபோது காவல் துறையினரின் உண்மையான முகத்தை காட்டிவிட்டார் என்ற பேச்சுக்களும் எழுந்தன.

விடுதலை: அந்தவகையில் அவர் எடுத்த விடுதலை படமும் கவனம் ஈர்த்தது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி விடுதலை படம் எடுக்கப்பட்டாலும்; அதில் அதிகளவு வெற்றிமாறனின் டச் இருந்தது. முக்கியமாக நக்சல் பாரி இயக்கத்தை சேர்ந்த புலவர் கலியபெருமாள் கேரக்டரில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்திருந்தார். சூரி கதையின் நாயகனாக நடித்திருந்தார். கடந்த 2023ஆம் வருடம் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது.
என் பேரனின் படிப்பு போச்சு.. தனுஷ்தான் காரணம்.. அட்டாக் செய்த தந்தை கஸ்தூரி ராஜா.. ரசிகர்கள் ஷாக்
கொஞ்சம் விமர்சனமும் உண்டு: படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சனத்தையும் சந்தித்தது. அதாவது காவல் துறையினர் அந்தப் படத்தில் இயக்கத்து ஆட்களை வேட்டையாடும் காட்சியை வெற்றிமாறன் தவிர்த்திருக்கலாம்; அதுமட்டுமின்றி அந்த சீனுக்கு இளையராஜா எதற்காக மாஸ் பிஜிஎம்மை போட்டார் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. மேலும் பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி நாவலிலிருந்தும் சில காட்சிகளை உருவிவிட்டார்கள் என்றும் சர்ச்சை எழுந்தது.

விடுதலை 2: சூழல் இப்படி இருக்க விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன். இதை வாத்தியாரின் (விஜய் சேதுபதி) வாழ்க்கையில் என்ன நடந்தது; அவர் ஏன் ஆயுத வழியை தேர்ந்தெடுத்தார் போன்ற விஷயங்களை வைத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர். முதல் பாகம் போலவே கண்டிப்பாக இந்த பாகமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். மேலும் இதில் மஞ்சு வாரியர், கிஷோர், கென் போன்றோரும் நடித்திருதார்கள்.
சுமாரான வரவேற்பு: ஆனால் படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. திரைக்கதையில் ஏதோ ஒன்று மிஸ் ஆனதாக ரசிகர்கள் ஓபனாக பேசினார்கள். அதேசமயம் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், படத்தின் ஆரம்பத்தில் கென் கருணாஸின் ஃபைட், இடைவேளை காட்சி உள்ளிட்டவைகளை ரசிகர்கள் கொண்டாடவும் தயங்கவில்லை. முதல் பாகம் போல இரண்டாவது பாகத்தில் சூரிக்கு நிறைய காட்சிகள் இல்லை. இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த காட்சிகளில் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார் அவர்.
ஹிந்தியில் விடுதலை 2: இந்நிலையில் விடுதலை 2 திரைப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்படுகிறது. அதாவது படமானது ஜீ 5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிக்கொண்டிருக்கிறது. தற்போது ஜீ 5 நிறுவனம் இந்தப் படத்தை ஹிந்தியிலும் டப் செய்து தங்களது ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம். கண்டிப்பாக தமிழில் எவ்வாறு படம் வரவேற்பை பெற்றதோ அதேபோல் ஹிந்தியிலும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.