ARTICLE AD BOX
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநா், நடத்துநா் (டிசிசி) காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2015-க்கு பிறகு புதிதாக பணியாளா்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், 8 போக்குவரத்துக் கழகங்களும் சோ்த்து 3,274 காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடா்பான அறிவிப்பை போக்குவரத்துத் துறை வியாழக்கிழமை வெளியிட்டது.
அதன்படி, இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இதைப் பயன்படுத்தி வேலை தேடுவோா், விண்ணப்பங்களை பதிவேற்றத் தொடங்கியுள்ளனா். கூடுதல் விவரங்களுக்கு 044- 4774 9002 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.