பொள்ளாச்சியில் திமுக போராட்டம்: ரயில் நிலையத்தில் ஹிந்தி பெயர் அழிப்பு!

2 days ago
ARTICLE AD BOX

ஹிந்தி திணிப்புக்கு எதிராக பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு பல்வேறான கட்சிகள் கடந்த சில நாள்களாகவே எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், ஹிந்தி திணிப்பை எதிர்த்து பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் திமுக சட்டத்திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் இன்று காலை போராட்டம் நடத்தினர்.

மேலும், ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த பொள்ளாச்சி என்ற வார்த்தையின் மீது கறுப்புநிறச் சாயத்தைப் பூசி, ஹிந்தி பெயரை அழித்தனர். இந்த சம்பவத்தின்போது, ஒரேயொரு காவல் அதிகாரி மட்டுமே ரயில் நிலையப் பாதுகாப்புப் பணியில் இருந்ததாகவும் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: தொடரும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையைக் கொண்டுவர மத்திய அரசும் பாஜக அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் பாஜகவை தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகளும் ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான், தமிழகத்துக்கு நிதி தரமுடியும் என்று மத்திய அரசு தெரிவித்ததற்கு தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.

Read Entire Article