பேட்டிங், பீல்டிங்கில் நாங்கள் முன்னேற வேண்டும் - வங்காளதேச கேப்டன்

2 hours ago
ARTICLE AD BOX

Image Courtesy: AFP

ராவல்பிண்டி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டட்தில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 240 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் வங்காளதேசம் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்ததது. இந்நிலையில், பேட்டிங், பீல்டிங்கில் நாங்கள் முன்னேற வேண்டும் என வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கூறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திற்கு பின்னர் ஷாண்டோ அளித்த பேட்டியில் கூறியதாவது,

இப்போட்டியை நாங்கள் நன்றாகத் தொடங்கினோம். ஆனால், மிடில் ஓவர்களில் ரன்களைச் சேர்க்க வேண்டிய தருணத்தில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். அங்கு நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. ஏனெனில், இது பேட்டிங் செய்ய ஒரு நல்ல விக்கெட். இங்கு எங்களுக்கு பெரிய பார்ட்னர்ஷிப்கள் தேவைப்பட்டன. ஆனால் அதனை எங்களால் செய்யமுடியவில்லை.

நஹித் ரானா மிகச்சிறப்பான பந்துவீச்சாளர். அவர் பந்து வீசிய விதத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக பந்துவீச்சு பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் ஒரு முக்கியமான ஆட்டம் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், தொடரை உச்சத்தில் முடிப்பது நல்லது. அதனால், நாங்கள் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article