ARTICLE AD BOX

Vikraman: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட விக்ரமனை தற்போது சர்ச்சை சூழ்ந்து இருக்கும் நிலையில் அவரை அந்த சீசன் டைட்டில் வின்னரான அசீம் கலாய்த்து இருக்கிறார்.
பொதுவாக பிக்பாஸின் ஒவ்வொரு சீசனிலும் இரண்டு போட்டியாளர்கள் தான் முட்டிக்கொள்வார்கள். ஒரு சில வாரங்களிலேயே தெரிந்துவிடும் இவர்களில் ஒருவருக்கு தான் டைட்டில் என்பது. அப்படி ஒரு சீசனில் மோதிக்கொண்டவர்கள் தான் அசீம் மற்றும் விக்ரமன்.
எப்போதும் கோபமும், ஆக்ரோஷமாக இருக்கும் அசீமுக்கு ஆதரவு இருந்த அதே நேரத்தில் அறம் வெல்லும் என அமைதியாக பேசிக்கொண்டு இருந்த விக்ரமனுக்கு ரசிகர்கள் இருந்தனர். இருவருக்கும் சம போட்டி இருந்த நிலையில் டைட்டிலை அசீம் தட்டி சென்றார்.

இருந்தும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கூட அவர் மீது தன்னுடைய கோபத்தினை பேட்டிகளில் காட்டினார் விக்ரமன். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பின்னர் கோபமாக நடந்த அசீமை விட அமைதியாக இருந்த விக்ரமன் தான் நிறைய சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
முதலில் ஒரு பெண்ணை ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. தற்போது பெண் வேடமிட்டு பாலியல் சீண்டல் செய்வதாக வீடியோக்களும் இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக விக்ரமன் அது சினிமா காட்சி என்றும், அடிப்படை ஆதாரம் இல்லாமல் வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் டைட்டில் வின்னரான அசீம், ஒரு விரல் நீட்டி மற்றவர்களை நீ குறை கூறும் போது, மூன்று விரல் உன்னை சுட்டிக்காட்டும் என்பதை மறவாதே மனிதா எனக் குறிப்பிட்டு அறம்வென்றது என டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேச்சாடா பேசுன மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைனு இப்போ மாவுக்கட்டு பரம்பரை ஆக்கிட்டாங்க என வடிவேலு காமெடி வீடியோவை இணைத்து கலாய்த்து இருக்கிறார். தற்போது அசீம் ரசிகர்கள் இந்த ட்வீட்டை கொண்டாடி வருகின்றனர்.