ARTICLE AD BOX
பெருநகர சென்னையின் கடனுக்காக வட்டி மட்டும் ரூ. 8.5 கோடி செலுத்தப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது கழிப்பறைகளையும் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம், வணிக வளாகக் கடைகளுக்கான மாத வாடகை குறித்த முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கேள்வி நேரத்தின்போது சென்னை பெருநகர மாநகராட்சியின் கடன் குறித்து சென்னை மேயர் பிரியாவிடம் பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மேயர் பிரியா பதிலளித்ததாவது, ``ஜனவரி முதல் தேதி வரையில் சென்னை மாநகராட்சிக்கு ரூ. 3,065.65 கோடி கடன் உள்ளது. அதில் ரூ. 1577.10 கோடி செலுத்தப்பட்டு, ரூ. 1488.50 கோடி நிலுவையில் உள்ளது. இந்த கடனில் ரூ. 8.5 கோடி வட்டியாக மட்டுமே செலுத்தப்படுவதோடு, காலாண்டுக்கு ஒருமுறை அசல் செலுத்தப்படுகிறது’’ என்று கூறினார்.
இதையும் படிக்க: நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது; என்ன செய்ய முடியும்? - சீமான் பேட்டி