ARTICLE AD BOX

ஜெயிலர், வேட்டையன் போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு இன்னும் ஒரு பெரிய அளவில் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ரஜினி இப்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதற்கு ஏற்ப லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். லோகேஷ் ரஜினி இணைந்து கூட்டணி அமைத்த படம் கூலி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது .
படத்தில் எல்லா மொழிகளிலும் இருக்கும் பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்கள் நடித்து வருகிறார்கள். நாகார்ஜுனா ,சத்தியராஜ் ,உபேந்திரா, அமீர்கான் என பல முன்னணி நடிகர்கள் நடித்து ஒரு பேன் இந்தியா திரைப்படமாக இந்த படம் தயாராகி வருகிறது. இதில் ஸ்ருதிஹாசனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் எப்படி தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி படத்திற்கு ஹைப்பை ஏற்படுத்தினாரோ அதைப்போல கூலி திரைப்படத்திலும் அந்த மாதிரியான ஒரு பாடல் இடம் பெற போவதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்த பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாட போவதாகவும் சமீபத்திய ஒரு தகவல் கிடைத்துள்ளது. தங்கம் கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இதற்கு முன்பு வரை போதைப்பொருள் ஆல்கஹால் போன்றவைகளை மையப்படுத்தியே படத்தை எடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் வித்தியாசமான ஒரு பாணியில் படத்தை எடுத்து வருகிறார்.
தன்னுடைய படத்தில் இளைஞர்களை வன்முறைக்கு ஈடுபடுத்தும் விதமாக எந்த ஒரு சம்பவமும் இருக்கக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துபவர் ரஜினி, அதனால் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமும் இருக்கக் கூடாது என ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறார். அதனால் தான் தங்க கடத்தல் சம்பவத்தை கையில் எடுத்து இருக்கிறார் லோகேஷ்.

இந்த நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் கூலி படத்தின் 45 வினாடிகள் கொண்ட காட்சியை சமீபத்தில் பார்த்தாராம். படம் பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை அள்ளப் போகிறது என்றும் ஆயிரம் கோடி வசூலை மிக எளிதாக கடந்து விடும் என்றும் கூறியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்காக பெரிய அளவில் குக் செய்து இருக்கிறார் என்றும் சந்தீப் கிஷன் கூறி இருக்கிறார்.