ARTICLE AD BOX
பெரிய ஹீரோக்களின் பாடல்கள்.. ரொம்ப ஆபாசம்.. பார்க்கவே முடியல.. வெளுத்துவிட்ட வனிதா விஜயகுமார்
சென்னை: விஜயகுமாரி மகள்களில் ஒருவரான வனிதா சினிமாவில் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதற்கு பிறகு சில பிரச்னைகளால் காணாமல் போன அவர்; ஏதேனும் அவரது குடும்ப பிரச்னைகளால் லைம் லைட்டுக்கு வருவார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேற்கொண்டு பிரபலமான அவர் தற்போது மிஸஸ் & மிஸ்டர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதனை அவரது மகள் ஜோவிகா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். ப்ளாக் அண்ட் வொயிட் காலத்திலிருந்து நடித்துவரும் அவருக்கு இரண்டு மனைவிகள். அவர்களில் மஞ்சுளாவுக்கு பிறந்தவர்களில் ஒருவர்தான் வனிதா. ஆரம்பத்தில் குடும்பத்துடன் பாசத்தோடும், அன்யோன்யமாகவும் இருந்த அவர் சில காரணங்களால் குடும்பத்திலிருந்து பிரிந்தார். அதற்கு முழு காரணமும் அவரது திருமண விவகாரம்தான் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்தார்கள்.

தொடர் திருமணங்கள்: முதலில் அவர் நடிகர் ஆகாஷ் என்பவரை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் ஆகாஷிடமிருந்து பிரிந்துவிட்டார் வனிதா. அவரைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு ஆனந்த் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அவரையும் பிரிந்தார். ஆகாஷ் மற்றும் ஆனந்த்துக்கு அடுத்து பீட்டர் என்பவரையும் திருமணம் செய்திருந்தார். இதற்கிடையே அவரும் நடன அமைப்பாளருமான ராபர்ட் மாஸ்டரும் டேட்டிங்கும் செய்தார்கள். இவை அனைத்தும் பெரிய சர்ச்சையை கிளப்பின.
அட ரஜினிகாந்த்தை அடுத்து இயக்கப்போகும் இயக்குநர் இவரா?.. நடந்தால் செம சம்பவம் உறுதி!
பிக்பாஸில் வனிதா: சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டார் அவர். அதில் அவரால் டைட்டில் அடிக்க முடியாவிட்டாலும் வீட்டுக்குள் அவர் செய்த அலப்பறைகள் மிகப்பெரிய பேசுபொருளாகின. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அவருக்கு சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதன்படி வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி, பிரசாந்த் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்த அந்தகன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார்.
மிஸஸ் & மிஸ்டர்: தற்போது மிஸஸ்&மிஸ்டர் என்கிற படத்தை இயக்கி நடித்துவருகிறார். அதில் ராபர்ட் மாஸ்டர் ஹீரோவாக நடிக்கிறார். மகள் ஜோவிகாதான் படத்தை தயாரிக்கிறார். படத்திலிருந்து ஒரு பாடல் காதலர் தினத்துக்கு வெளியானது. இதற்கிடயே வனிதாவை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடக்கூடியவர். அந்த குணாதிசயம்கூட அவருக்கு பல சமயங்களில் பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பெரிய ஹீரோக்கள் குறித்து அவர் தற்போது பேசியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
என்ன ரோஸ் இதெல்லாம்... கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காட்ட தயாரான டைட்டானிக் ஹீரோயின்!
என்ன பேசினார்?: அதாவது டெக்ஸ்டர் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "2000களுக்கு முன்பெல்லாம் ஒரு பாடல் காட்சி அவ்வளவு நன்றாக இருக்கும். தற்போது 2025. ஒரு பாடல் காட்சிக்கு பல கோடிகளை கொட்டி செலவு செய்கிறார்கள். பெரிய சம்பளத்தையும் பெரிய ஹீரோக்களுக்கு கொடுக்கிறார்கள். ஆனால் அந்தப் பாடல் காட்சியெல்லாம் பார்க்கும்படியா இருக்கிறது. பார்க்கவே முடிவதில்லை. அவ்வளவு ஆபாசமாக இருக்கிறது. அதையெல்லாம் ஒரு ஸ்டெப் என்றே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு படுமோசமாக உள்ளது" என்றார்.