ARTICLE AD BOX
2500 Rupees For Woman: தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு குடும்பத் தலைவிகளின் முன்னேற்றத்திற்காக கொண்டுவந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) மாநிலம் முழுவதும் பெரியளவில் கவனம் ஈர்த்தது. இந்த திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட தகுதிகள் உடைய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கிக்கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
2500 Rupees For Woman: தமிழ்நாட்டில் தொடங்கி...
தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1 கோடியே 14 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகின்றனர். இதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பை அடுத்து மத்திய பிரதேசம், கர்நாடகா தொடங்கி பல்வேறு மாநிலங்களில் மகளிருக்கு மாதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது டெல்லியில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசும் மகளிருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2500 Rupees For Woman: பாஜக அளித்த வாக்குறுதி
டெல்லியில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மகிளா சம்மான் யோஜனா என்ற பெயரில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2,100 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகையாக கொடுப்போம் என பாஜக வாக்குறுதி அளித்தது.
2500 Rupees For Woman: மார்ச் 8 மகளிர் தினம் அன்று...
அந்த வகையில், டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களை கைப்பற்றி அருதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாஜக அரசு விரைவில் மகளிருக்கான ரூ.2,500 ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை தொடங்கும் என கூறப்பட்டது. அந்த வகையில், வரும் மார்ச் 8ஆம் தேதி அதாவது மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியின் முதலமைச்சர் ரேகா குப்தா இந்த மகளிர் ஊக்கத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2500 Rupees For Woman: 'ரூ.2,500 - கவலை வேண்டாம்'
மகளிர் தினத்தை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வரும் மார்ச் 8ஆம் தேதி 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்களும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிப்பொறுப்பேற்றதும் இந்த திட்டத்தை கொண்டுவரும் என கூறியிருந்த நிலையில், ஏற்கெனவே இத்திட்டத்தை பாஜக தாமதப்படுத்துகிறது என எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி மெர்லினா குற்றஞ்சாட்டியிருந்தார். இருப்பினும், அதற்கு முதலமைச்சர் ரேகா குப்தா,"ரூ.2,500 குறித்து கவலைப்பட வேண்டாம். நாங்கள் கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றுவோம்" என பதிலடி கொடுத்தார்.
மேலும், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா ஊடகம் ஒன்றில் பேசுகையில்,"எங்களது அரசு சமூகத்தில் அனைத்து பிரிவினருக்காகவும் பணியாற்ற உறுதிக்கொண்டிருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதிசெய்வோம். மார்ச் 8ஆம் தேதி வரட்டும்... அனைத்தும் தெரியவரும்" என்றார்.
மேலும் படிக்க | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்....!
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியாகப்போகும் குட் நியூஸ்! ரூ.1000 உறுதி மக்களே
மேலும் படிக்க | வருது புதிய ரூல்ஸ்... இனி இந்த வண்டிகளுக்கு பெட்ரோல் போட மாட்டார்கள்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ