பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

2 days ago
ARTICLE AD BOX

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

எதையும் எதிர்பார்த்து இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுகிற இயக்கம். தி.மு.க. போன்று எதற்கெடுத்தாலும் வசூல் செய்யும் இயக்கம் அல்ல.

இன்றைக்கு புதிதாக அப்பா வந்துள்ளார். அந்த அப்பா, அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், லேப்-டாப் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் முடக்கிவிட்டார். நீங்கள் கொடுக்கும் 1,000 ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?

இன்றைக்கு எங்கு பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கூட்டு பாலியல் பலாத்காரம். இதுதான் தி.மு.க. அரசின் சாதனை. மக்களை பற்றி சிந்திக்காத தனது குடும்பத்தை பற்றியே சிந்திக்கிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தூக்கி எறியப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Read Entire Article