பெண் வேடமிட்டு பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை

8 hours ago
ARTICLE AD BOX

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் தாலுகா வாலசமுத்திரம் ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (17), அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். கடந்த 15ம் தேதி திருப்பதி கோயிலுக்கு தாய் சென்றுள்ள நிலையில், சந்தோஷ்குமார் சேலை அணிந்து பெண் வேடமிட்டது போன்ற போட்டோவை அவரது செல்போனில் டிபி ஆக வைத்துள்ளார்.

இதைப் பார்த்த வெளியூரில் வசிக்கும் அவரது சகோதரி, சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு கண்டித்து உடனடியாக அப்படத்தை நீக்கும்படி தெரிவித்துள்ளார்.அதன்பிறகு அவர் போன் எடுக்கவில்லை. அவரது உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது சந்தோஷ்குமார் சேலை அணிந்து பெண் வேடமிட்டபடி, மற்றொரு சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

The post பெண் வேடமிட்டு பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article