பெண் குழந்தைகளால் இந்தியாவுக்கு பெருமை: பிரதமர் மோடி பெருமிதம்

5 hours ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது பதிவில், ‘‘தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புக்களை உறுதி செய்வதற்குமான எங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகளின் சாதனைகள் குறிதது இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களின் சாதனைகள் நாம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றது. கல்வி, தொழில்நுட்பம், திறன்கள் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. அவை பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் பங்களித்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பெண் குழந்தைகளால் இந்தியாவுக்கு பெருமை: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article