ARTICLE AD BOX
உத்தரப் பிரதேசத்தில் பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை அளித்த உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவுப் பணியின்போது, உதவி ஆய்வாளரான மோகித் ராணா பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி, மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் பெண் உதவி ஆய்வாளர் புகார் அளித்தார்.
மேலும், தன்னிடம் ஆபாசப் படங்களைப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதனடிப்படையில், மோகித்திடம் விசாரணை மேற்கொண்டபோது, தப்பிக்க முயன்றதோடு, ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், ஆபாசப் படங்கள் இருந்த தனது ஸ்மார்ட்வாட்ச் மற்றும் மொபைல் போனையும் மோகித் வெளியே வீசி எறிந்தார்.
இதையும் படிக்க: ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்!
இருப்பினும், மோகித்திடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பெண் உதவி ஆய்வாளரின் பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவரை கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மோகித்தின் மொபைல் போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சை தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.