பெட்ரோல் போடும் போது அவசியம் இதை கவனிங்க!

3 hours ago
ARTICLE AD BOX

பொதுமக்கள் பெட்ரோல் போடும் போது அவசியம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நவீன காலத்தில் மக்கள் பைக். கார்களையே பிரதானமாக பயன்படுத்துகின்றனர். சைக்கிள்களுக்கு குட்பை சொல்லிவிட்டு மக்கள் வேகமாக ஓடுகின்றனர். அவர்களுக்கு ஏதுவாக பல்வேறு வகையான வாகனங்கள் வந்துவிட்டது. அதில் பலரும் இரு சக்கர வாகனங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த வாகனம் இயங்குவதற்கு பெட்ரோல் அவசியமானதாகும். பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்த நிலையில் கடந்த ஓராண்டாக எந்த மாற்றமுமின்றி 101 ரூபாயே நீடித்து வருகிறது.

ஆனாலும் மக்கள் பெட்ரோல் போடுவதற்கு திண்டாடி தான் வருகின்றனர். பெட்ரோல் பங்கில் ஏமாறுவதை தடுக்க நீங்கள் பெட்ரோல் போடும் முன் பூஜ்யத்தை மட்டும் தான் கவனிப்பீர்கள். ஆனால் இனி இதையும் கவனித்தில் கொள்வது அவசியமாகும்.

பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் போது மக்கள் தங்கள் கவனத்தை பெட்ரோல் மெஷினில் உள்ள ஜீரோவின் மீது வைக்கின்றனர். கொடுக்கப்படும் தொகைக்கு சரியான அளவில் பெட்ரோல் நிரப்பப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள ஜீரோ பார்ப்பதை மக்கள் தவறுவதில்லை.

Petrol
பெட்ரோல் பங்கில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

ஆனால் ஜீரோ பார்க்கப்பட்டாலும் பெட்ரோல் திருட்டு நடக்க அதிக வாய்ப்புள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

பெட்ரோல் நிரப்பப்படும் போது பூஜியத்தில் கவனம் செலுத்தினால் மட்டும் போதாது, நீங்க மனதில் வைத்துக்கொள்ளவேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்களும் இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறையே மக்களுக்கு விளக்கி கூறியுள்ளது.

அதாவது, பெட்ரோல் மற்றும் டீசலை நீங்கள் நிரப்புவதற்கு முன், இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள் - மீட்டர் ரீடிங் 0.00 ஆக இருக்க வேண்டும், விநியோக இயந்திரத்தின் சரிபார்ப்பு சான்றிதழ் காட்டப்பட வேண்டும். நீங்கள் விரும்பினால், பெட்ரோல் பம்பில் கிடைக்கும் 5 லிட்டர் அளவுகோலைப் பயன்படுத்தி நிரப்பப்பட்ட அளவை சரிபார்த்துகொள்ளலாம்.

Petrol
எலக்ட்ரிக் பைக் vs பெட்ரோல் பைக்: எதில் அதிக பயன்?

உங்களுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டால் , நுகர்வோர் சட்ட அளவியல் அதிகாரியிடம் புகார் கொடுக்கலாம் அல்லது தேசிய நுகர்வோர் உதவி எண் 1915 -ல் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம் என்று கூறியிருக்கிறது. இதனால் இனி பெட்ரோல் போடும் முன்பு திருடப்படுவதை தடுக்க கவனமாக இருங்கள்.

Read Entire Article