ARTICLE AD BOX

பெங்களூரு,
3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூருஅணி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் படுதோல்வி அடைந்தது. வதோதராவில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்ட பெங்களூரு அணி, அதன் பிறகு உள்ளூரில் 4 ஆட்டங்களிலும் வரிசையாக தோற்று இருக்கிறது.
இது குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா கூறுகையில்,
'இந்த போட்டியை காண ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து ஆதரவளித்தனர். தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள். பெங்களூரு மைதானத்தில் அவர்களுக்காக ஒரு போட்டியிலும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்' என்றார்.