பெங்களூரில் கால் டாக்சி டிரைவரை அடித்துக் கொன்ற எலக்ட்ரீஷியன்! விசாரணையில் பகீர்

2 days ago
ARTICLE AD BOX

பெங்களூரில் கால் டாக்சி டிரைவரை அடித்துக் கொன்ற எலக்ட்ரீஷியன்! விசாரணையில் பகீர்

Bangalore
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் தனது மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததாக தனது நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வர்தூரை சேர்ந்தவர் சதீஷ் ரெட்டி. இவர் எலக்ட்ரீசியனாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வருகிறார்.

bangalore crime

இவருடைய நண்பர் சித்ரதுர்காவை சேர்ந்த கிஷோர்குமார் (34). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கால் டாக்சி டிரைவராக இருந்தார். இவர் சதீஷுக்கு நண்பர் என்பதால் எப்போதெல்லாம் வர்தூருக்கு சவாரிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் தனது நண்பரின் வீட்டிற்கு சென்று அவரை பார்த்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனால் சதீஷுக்கு கிஷோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தனது மனைவியுடன் கிஷோருக்கு தகாத உறவு இருக்குமோ என சந்தேகமடைந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டருக்கே கிஷோர் குமார் நின்றிருந்ததை சதீஷ் பார்த்துவிட்டார்.

உடனே அவருக்கு ஆத்திரம் பொங்கியது. இதனால் அவருடன் போய் சண்டையிட்டதாக தெரிகிறது. அங்கிருந்த கட்டுமான தொழில் நடக்கும் கட்டடம் அருகே இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆத்திரத்தில் தனது நண்பரை கடுமையாக தாக்கியுள்ளார் சதீஷ்.

கிஷோரை எச்சரித்த சதீஷ், "இனி என் வீட்டு பக்கமே வரக் கூடாது" என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிஷோரை பார்த்த அப்பகுதிவாசிகள் உடனே காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர்.

தகவலறிந்த போலீஸார் வந்த போது அங்கு கிஷோர் குமார் இறந்திருந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விசாரணையின் பேரில் சதீஷ் ரெட்டியை போலீஸார் கைது செய்தனர்.

More From
Prev
Next
English summary
Bangalore electrician killed his friend for having affair with his wife and he was arrested by police.
Read Entire Article