ARTICLE AD BOX
First Video Of Sunita Williams After Landing On Earth : சுனிதா வில்லியம்ஸ் கிட்டதட்ட 9 மாதங்கள் கழித்து விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பினார். இதையடுத்து, அவர் செய்த செயல்கள், இணையத்தில் வைரலாகி வருகிறது.
விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ்!
அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளிக்கு ஆராய்ச்சி சம்பந்தமாக, கடந்த ஜூன் மாதம் சென்றிருந்தார். இவருடன் புர்ஜ் வில்மோர் என்ற இன்னொரு வீரரும் சென்றிருந்தார். இவர்கள் சென்ற விண்கலத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் விண்வெளியிலேயே சிக்கிக்கொண்டனர். 8 நாளில் வேலையை முடித்து விட்டு திரும்ப வேண்டிய இவர்கள், 9 மாதங்கள் அங்கேயே சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வெற்றிகரமாக சுனிதாவை மீட்ட நாசா:
விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்று வருவதில் மிக முக்கியமான பகுதி விண்கலத்தை பத்திரமாக தர இறக்கி விண்வெளி வீரர்களை மீட்பது. அது 2003 ஆம் ஆண்டு feb 1 ம் தேதி. கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு விஞ்ஞானிகள் பயணித்த பயணித்த கொலம்பியா space ஷட்டில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பதாக வெடித்து சிதறியது. இது நாசாவின் வரலாற்றில் மிகப்பெரும் கரும்புள்ளியாக மாறியது. அந்த சம்பவத்திலிருந்து இப்போது வரை நாசா விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதில் அதீத கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் தான் சுனிதா வில்லியம்ஸ் வில் மோர் உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் டிராகன் விண்கலம் மூலமாக பூமி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில். விண்கலம் தரை இறங்குவது பற்றி பல்வேறு விஷயங்கள் சுவாரசியத்தை கூட்டும் வகையில் இருந்தன.
இறுதியில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் நாசா பத்திரமாக அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கடலில் தரையிரக்கப்பட்டது. அதன் பிறகு அவரையும் அவருடன் இருந்த பிற குழுவினரையும் நாசாவை சேர்ந்த வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்கள் வந்திரங்கிய போது, அவர்களின் விண்கலத்தை சுற்றி டால்பின்கள் சூழந்து கொண்டு, வரவேற்பு கொடுத்தன.
சுனிதா செய்த முதல் செயல்..
சுனிதா வில்லியம்ஸ், 9 மாதங்கள் விண்வெளியிலேயே புவியீர்ப்பு விசை இல்லாமல் இருந்தார். இதனால், அவரால் இனி வரும் நாட்களில் நடப்பதற்கு மிக சிரமமாக இருக்கும். எனவே, இவரை சர்க்கர நாற்காலியில் வைத்து, சுற்றியிருந்த ஊழியர்கள் கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது. இதையடுத்து, அவர் கேமராக்களை பார்த்தவுடன் Thumbs Up காண்பித்து, புண்ணகைத்தபடி பாேஸ் கொடுத்தார். பின்னர், தன்னை மீட்க வந்த பிற நாசா ஊழியிர்களையும் பார்த்து இரு கைகளிலும் ஹாய் காட்டினார். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Finally she is back. pic.twitter.com/X4UYeZUaJs #sunitawilliamsreturn #NASA #earth
— @ChekrishnaCk) March 19, 2025
மோட்டிவேஷனாக விளங்கும் சுனிதா..
சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீராங்கணைகளிலேயே அதிக நாட்களை விண்வெளியில் கழித்த பெண் என்ற பெருமைக்கு சொந்த்தக்காரர் ஆகியிருக்கிறார். இவர் இந்த 9 மாதங்கல், அதாவது 287 நாட்கள் ஸ்பேஸில் இருந்துள்ளார். அவரது கெரியரில் மொத்தம் 608 நாட்கள் விண்வெளியில் இருந்திருக்கிறார். பெண்கள் அனைவரும் மன உறுதி மிக்கவர்கள் என்பதற்கு பெரிய எடுத்துக்காட்டாக விளங்கும் சுனிதா, அதனை 9 மாதங்கள் விண்வெளியில் கழித்து நிரூபித்தும் இருக்கிறார். இவர் முன்னர் கூறிய “இன்னொருவரின் கருத்டு உங்களின் மதிப்பை வரையறுக்கவோ அல்லது உங்கள் திறனை கட்டுப்படுத்தவோ அனுமதிக்காதீர்கள். உங்களை நீங்கள் நம்புங்கள்” என்ற கருத்து, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | சிரித்த முகத்துடன் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்! வெளியான வீடியோ காட்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ