பூமி திரும்புவதற்கு முன்பு... நாசா வெளியிட்ட புகைப்படம்!

14 hours ago
ARTICLE AD BOX

பூமி திரும்புவதற்கு முன்பு விண்வெளியில் தனது குழுவினருடன் சுனிதா வில்லியம்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் உள்ளிட்டோரை பூமிக்கு திரும்ப அழைத்து வர அனுப்பட்ட அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது.

டிராகன் விண்கலனில் அவர்கள் பூமி திரும்பவுள்ளனர். சற்று நேரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படவுள்ளது. இதற்காக பூமி திரும்பவுள்ள வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இதனிடயே பூமி திரும்பும் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோா்ம், நிக் ஹாவுக், ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் கோர்புனோவ் உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சரியாக மார்ச் 18ஆம் தேதி மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையொட்டி கடல் பகுதிக்கு டிராகன் விண்கலம் வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி, பூமிக்கு வந்துசேரும் காட்சிகள் அனைத்து நேரடியாக நாசா ஒளிபரப்பு செய்யவுள்ளது.

இதையும் படிக்க | இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 100 பேர் பலி

Read Entire Article