பூத் கமிட்டி.. அடிப்படையே தெரியலையா? வார்த்தையை விட்ட விஜய்.. என்னங்க இப்படி சொல்லிட்டாரே!

3 hours ago
ARTICLE AD BOX

பூத் கமிட்டி.. அடிப்படையே தெரியலையா? வார்த்தையை விட்ட விஜய்.. என்னங்க இப்படி சொல்லிட்டாரே!

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பூத் கமிட்டி தொடர்பாக பேசிய கருத்துக்கள் கடுமையான விவாதங்களை சந்தித்து வருகிறது. அரசியல் அடிப்படை அவருக்கு தெரியவில்லை என்று சில விமர்சனங்களை சிலர் விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர்.

"தேர்தலின்போது தவெகவின் தோழர்களைத்தான் பூத் ஏஜெண்டுகளாக நியமிக்கப் போகிறோம். வெகு சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு ஒன்றை நடத்தப் போகிறோம். அன்றைக்குத் தெரியும் தவெக எந்த ஒரு பெரிய கட்சிக்கும் சளைத்தது இல்லை என்று"

TVK Tamilaga Vettri Kazhagam Vijay

விஜய் பேச்சு

நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழக முதலாண்டு ஆண்டு நிகழ்வில் பேசிய விஜய், இந்தி எதிர்ப்பை பற்றி பேசினார். இந்தி என்ற வார்த்தையை பயன்படுத்தாமலே இந்தி திணிப்பை பற்றி பேசினார். பாஜக என்ற வார்த்தையை பயன்படுத்தாமலே அதை பற்றி கருத்து சொன்னார்.

நேரடியாக பேசுவதற்கு விஜய்க்கு என்ன யோசனையோ.. அச்சமோ.. அது அவருக்கே வெளிச்சம். அதெல்லாம் அவரின் நிலைப்பாடு. ஆனால் அதை தாண்டி அவர் சொன்ன கருத்துக்கள் சிலதான் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

விஜய் பேச்சு

இந்த விழாவில் பேசிய விஜய், மக்களுக்கு பிடித்துப் போன ஒருவர் அரசியலுக்கு வந்தால், சிலர் எதிர்க்கிறார்கள். என்னை எப்படி வீழ்த்தலாம் என சிலர் குழப்பத்தில் உள்ளனர். பணம் பணம் பணம் என பணத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருக்கும் பண்ணையார்களை அரசியல விட்டு அகற்றுவதே நம்முடைய முதல் வேலை. அண்ணா, எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது பின்னால் இருந்தவர்கள் இளைஞர்கள்தான்.

மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் பணம் மட்டுமே குறியாக உள்ள பண்ணையார்களை அகற்ற வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தது ஒரு சிலருக்கு எரிச்சலை கொடுத்துள்ளது. விரைவில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த போகிறோம். தேர்தலின்போது தவெகவின் தோழர்களைத்தான் பூத் ஏஜெண்டுகளாக நியமிக்கப் போகிறோம். வெகு சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு ஒன்றை நடத்தப் போகிறோம். அன்றைக்குத் தெரியும் தவெக எந்த ஒரு பெரிய கட்சிக்கும் சளைத்தது இல்லை.

அந்த காலத்துல பண்ணையார்கள் தான் பதவியில இருப்பாங்க. இப்ப பதவி இருக்கவங்க எல்லாம் பண்ணையாரா மாறிடுறாங்க. இப்போ புதுசா ஒரு பிரச்னையை கிளப்பி இருக்காங்க.புதிய கல்விக்கொள்கையை கொடுக்கவில்லை என்றால் மாநில நிதியை நிறுத்துவோம் என்கிறார்கள். கொடுக்க வேண்டியது அவர்கள் கடுமை. வாங்க வேண்டியது இவர்கள் கடமை. எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை. கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வலுக்கட்டாயமாக திணித்தால் எப்படி BRO.

இங்கே எவ்வளவு சீரியஸாக ஒரு பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது? இவங்க ரெண்டு பேரும், அதாங்க ஃபாசிஸமும் பாயாசமும். நம்ம கொள்கை எதிரியும் அரசியல் எதிரியும் பேசி செட்டிங் செய்துகொண்டு சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். தினம் தினம் இதை சொல்லி சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

பாசிசமும், பாயாசமும் செட்டிங் வைத்து எல்கேஜி பாய்ஸ் போல விளையாடுகிறார்கள்.. இதை எல்லாம் நாம் நம்ப வேண்டுமா? இவர்கள் அடித்துக் கொள்வதுபோல அடித்துக் கொள்வார்களாம்... மக்கள் அதை நம்பணுமாம்! What Bro? Its Very Wrong Bro... இதுக்கு இடையில நம்ம பசங்க.. உள்ளபோய் #TVKforTN என சம்பவம் செய்துவிட்டு வந்துவிட்டார்கள்! யார் சார் நீங்கள்லாம்? எங்க சார் இருக்கீங்க? ஸ்லீப்பர்செல்ஸ் மாதிரி", என்றெல்லாம் விஜய் பேசி இருக்கிறார்.


பூத் கமிட்டி பேச்சு

இதில் விஜய் பூத் கமிட்டி தொடர்பாக பேசிய கருத்துக்கள் கடுமையான விவாதங்களை சந்தித்து வருகிறது. அவர் தனது பேச்சில், தேர்தலின்போது தவெகவின் தோழர்களைத்தான் பூத் ஏஜெண்டுகளாக நியமிக்கப் போகிறோம். வெகு சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு ஒன்றை நடத்தப் போகிறோம். அன்றைக்குத் தெரியும் தவெக எந்த ஒரு பெரிய கட்சிக்கும் சளைத்தது இல்லை என்று கூறியுள்ளார்.

அரசியல் அடிப்படை அவருக்கு தெரியவில்லை என்று சில விமர்சனங்களை சிலர் விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர். என்ன இப்படி உளர்றாப்போல.. பூத் கமிட்டி ஏஜென்ட்க்கு அந்த கட்சி உறுப்பினரைத்தான் பூத்ல உட்கார வைப்பாங்க.. இல்ல புரியல

மத்த கட்சியெல்லாம் பக்கத்து கட்சில இருக்குற ஆளுகளயா கூட்டிட்டு வந்து பூத் கமிட்டி போடும் ஆனா இதுக்கும் தவெக்கன்ஸ் பயர் விட்டுட்டு இருக்கானுங்க. என்று கூறியுள்ளார். இன்னொருவர் கிண்டலாக இது வரவேற்கத்தக்க விஷயம். பொதுவாக திமுக, அதிமுககாரர்களை பூத் ஏஜண்ட்டுகளாக நியமிக்கும். பாஜக காங்கிரஸ் அல்லது ஜார்கண்ட் முக்தி மோர்சாகாரர்களை நியமிக்கும். தன் கட்சிக்காக தன் கட்சி ஆட்களையே பூத் ஏஜெண்டுகளாக நியமிப்பது இதற்கு முன் நடந்திருந்தாலும் இதுதான் முதல் முறை, என்று கிண்டலாக கூறியுள்ளார்.

More From
Prev
Next
English summary
Did Vijay's talk on booth committee backfire Tamilaga Vettri Kazhagam?
Read Entire Article