பூஜைக்குரிய இலை எது? 5 சக்தி வாய்ந்த இலைகள்!

1 day ago
ARTICLE AD BOX

சில கடவுள்களுக்கு மலரைக்காட்டிலும் இலைகளை வைத்து பூஜிப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவ்வாறு செய்யும் போது நம்முடைய வாழ்வில் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த 5 இலைகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. துளசி

துளசி மகாவிஷ்ணுவிற்கும், லக்ஷ்மி தேவிக்கும் உகந்த இலையாக கருதப்படுகிறது. துளசி இலையை தண்ணீரில் போடும் போது அந்த தண்ணீர் கங்கை நீருக்கு சமமான புனிதத்தை பெறுவதாக சொல்லப்படுகிறது. துளசி இலையின் நுனி பிரம்மாவாகவும், நடுப்பகுதி விஷ்ணுவாகவும், கீழ்ப்பகுதி சிவனாகவும் கருதப்படுகிறது. துளசி இலையை வைத்து விஷ்ணுவையும், லக்ஷ்மிதேவியையும் பூஜிக்கும் போது அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்று சகல சௌபாக்கியத்துடன் வாழலாம்.

2.வில்வம்

வில்வத்தின் மூன்று இலைகள் மூன்று கண்களை உடைய சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறது. வில்வ இலைக் கொண்டு சிவனை பூஜித்தால் ஏழு ஜென்மபாவங்களும் போகும். வில்வ இலை வைத்து பூஜித்தால் ஒரு லட்சம் மலர்களைக் கொண்டு சிவபெருமானை பூஜித்த பலன் நமக்கு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பிறர் மீது இரக்கம் கொள்ளுங்கள் வாழ்க்கை இன்பமாகும்!
5 powerful leaves with god aspect!

3. அருகம்புல்

அருகம்புல் வைத்து விநாயகரை பூஜிப்பதன் மூலமாக காரியத்தடை நீங்கும். நம்மை சுற்றியுள்ள சூழ்ச்சிகள் அகலும். மேலும் நம்மை சுற்றியுள்ள பகைவர்கள், எதிரிகள் தொல்லை நீங்கும். தொழிலில் முன்னேற்றமும் அறிவும், ஞானமும் கிடைக்கும்.

4. வெற்றிலை

வெற்றிலை சுபநிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மங்களகரமான இலையாகும். இதன் நுனியில் மகாலக்ஷ்மியும், மத்தியில் சரஸ்வதியும், காம்பில் மூதேவியும் இருப்பதாக கருதப்படுகிறது. வெற்றிலைக் கொண்டு தீபம் ஏற்றி முருகர் வழிப்பாடு செய்யும் போது முருகரின் அருளும், ஆசியும் நமக்கு கிடைக்கும். ஆஞ்நேயருக்கு வெற்றிலையை வைத்து பூஜை செய்யும் போது காரியத்தடை நீங்கி வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். 

இதையும் படியுங்கள்:
கல் உப்பை பூஜையறையில் வைக்கலாமா?
5 powerful leaves with god aspect!

5. மருதாணி

மருதாணி இலை எமதர்மனிடம் அருளும், ஆசியும் பெற்றதாகும். மகாலக்ஷ்மியின் அம்சம் கொண்டதாகும். மருதாணி இலையைக் கொண்டு வீட்டில் பூஜிக்கும் போது கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். கணவனுடைய ஆயுள் அதிகரிக்கும். துர்மரணம், அகால மரணம் ஏற்படாது. மகாலக்ஷ்மியின் அருளும், ஆசியும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Read Entire Article